கையில் பட்டாக்கத்தி வைத்தக்கொண்டு தெருவில் பிறந்தநாள் கச்சேரி…9 பேர் அதிரடி கைது!
ஹைதராபாதில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி போன்ற ஆயுதம் வைத்து தெருவில் பாட்டுக்கு நடனம்.
ஹைதராபாதில் 9 இளைஞர்கள் தெருவில் இரங்கி கொரோனா நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மீறி அவர்களில் இருவரின் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வைரலானதை அடுத்து போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த கொண்டாட்டம் ஜூன் 9 அன்று இரவு நகரில் மல்லேபள்ளி அருகே அப்சல்சாகரின் பைலன்களில் நடந்துள்ளது. மேலும் இளைஞர்கள் நள்ளிரவில் அக்கம் பக்கத்திலுள்ள தெருக்களில் வந்து, வாள்களையும் கத்திகளையும் பயன்படுத்தி, கூட்டத்தில் இசைக்கு நடனமாடியதால் அவர்கள் மீது ஹபீப்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவு கொண்டாட்டத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதையடுத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது. இதையடுத்து ஆயுத தண்டனைச் சட்டத்தின் 25 வது பிரிவு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 மற்றும் 269 பிரிவுகளின் கீழ் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் வீடியோவில், ஒரு பெரிய ஃப்ளெக்ஸியன் பின்னணியில் 2 பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்களின் வாழ்த்துக்களுடன், மற்ற இளைஞர்கள் அவர்கள் இருவரையும் தங்களின் தோள்களில் தூக்கி இசைக்கு நடனம் ஆடுவதைக் காணலாம். மேலும் குறைந்தது 6 பேராவது ஒரு வாள் அல்லது கத்தியை கையில் வைத்து ஆடுவதைக் காணலாம்.
இதுகுறித்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி எம்.நரேந்தர் கூறுகையில் அந்த 9 இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார்.