“சாதி மறுப்பு திருமணம்”..! “மகளை வெறித்தனமாக தாக்கிய தந்தை”அரங்கேறிய கொடூரம்..!!

Default Image

தெலுங்கானாவில் கூலிப்படையை ஏவி, மகளின் காதல் கணவனை தந்தை தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி அடங்குவதற்குள், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மகளையும், அவரது கணவனையும் பட்டப்பகலில் தந்தையே வெறித்தனமாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தலைநகர் ஐதராபாத் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த மாதவி என்பவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, சந்தீப் என்பவரைக் காதலித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதவியின் தந்தை மனோகர் ஆச்சாரி கடும் கோபத்தில் இருந்துள்ளார். புதன் கிழமை அன்று மாலை கணவனும், மனைவியும் எஸ் .ஆர். நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எர்ரகட்டா என்ற இடத்தில் இருந்து புறப்படுவதற்காக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து இருந்தனர்.

அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த மனோகர் ஆச்சாரி, அவர்கள் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினார். ஹெல்மெட்டை கழற்றிய அவர், திடீரென பையில் இருந்து இளநீர் சீவும் அரிவாளை வெளியில் எடுத்து சந்தீப்பை வெட்டினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாதவி கணவனைக் காப்பாற்றுவதற்காக போராடினார்.

Related image

இதை அடுத்து பெற்ற மகள் என்றும் பாராமல், மாதவியையும் வெட்டினார் மனோகர் ஆச்சாரி.சாலையில் சென்றவர்கள் பரபரப்புடன் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். அப்போது சிலர் தடுக்க முயன்ற போதும், அரிவாளைக் காட்டி மனோகர் மிரட்டியதால் ஏதும் செய்யமுடியாமல் திரும்பிச் சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாதவி கவலைக்கிடமாக இருப்பதால் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து எஸ் ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மனோகர் ஆச்சாரியை தேடி வருகின்றனர்.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்