பிரசவ வலியால் துடித்த நிறை மாத கர்ப்பிணியை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, ஒருவருக்கு மட்டும் சிறப்பு ரயிலை இயக்கிய ஐதராபாத், ‘மெட்ரோ’ ரயில் நிர்வாகத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் கன மழை பெய்தது. இதில் அந்த நகரமே வெள்ளக்காடாக மாறியதால், சாலை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்ததுப் போனது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, கர்ப்பிணி ஒருவர், விக்டோரியா மெமோரியல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தார். பிரசவ வலியால் துடித்த அவர், அங்கிருந்த ஊழியர்களிடம், மியாபூர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றார். வழக்கமாக இரவு, 9:00 மணியுடன், மெட்ரோ ரயில் சேவை முடிவடையும்.கர்ப்பிணியின் நிலையை கருத்தில் வைத்து, உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, அவர் ஒருவருக்காக மட்டும், சிறப்பு ரயிலை மெட்ரோ நிர்வாகம் இயக்கியது. இந்த செயல், பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…