ஐதராபாத்-விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்! ஜனவரி 19இல் தொடங்கி வைக்கிறார் மோடி.!
ஐதராபாத்-விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, பிரதமர் மோடி ஜனவரி 19ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
நாட்டின் ரயில்வே நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும், மற்றொரு வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தவும், பிரதமர் மோடி ஜனவரி 19 அன்று தெலுங்கானாவுக்கு வருகை தருகிறார். 2,400 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பதோடு, ஹைதராபாத் மற்றும் விஜயவாடா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மேலும் 700 கோடி செலவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.1,231 கோடி செலவில் செகந்திராபாத்-மஹ்பூப்நகர் இரட்டிப்புப் பணிகளை, பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.