Categories: இந்தியா

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை, திரையிட்ட ஹைதராபாத் மாணவர்கள்.!

Published by
Muthu Kumar

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசியின்  ஆவணப்படத்தை மாணவர்கள் குழு திரையிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி தயாரித்த ஆவணப்படம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சிலர் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர். மத்திய அரசால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிபிசியின் மோடி குறித்த ஆவணப்படம், உண்மையில் தடை செய்யப்படவில்லை என திரையிட்ட மாணவர்களின் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் கலவரம் தொடர்பாக, பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனம்(பிபிசி) தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசால் இந்த ஆவணப்படம் சமீபத்தில் தடை செய்யப்பட்டது. இந்த ஆவணப்படம் உண்மையில் தடை செய்யப்படாமல் இருந்ததால் மாணவர்கள் இதனை திரையிட்டதாக மாணவர்களின் தலைவர் மேலும் கூறினார்.

பல்கலைக்கழக விதிகளின்படி, மாணவர்கள் திரையிடுவதற்கு முன்பாக எந்த அனுமதியும் பெறவில்லை எனவும், வேறுசில மாணவர்களின் புகாரின் அடிப்படையில் மாணவர்கள் தடை செய்யப்பட்ட படத்தை திரையிட்ட தகவல் நிர்வாகத்திற்கு தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

“இந்தியா: மோடி கேள்வி” என தலைப்பிடப்பட்ட பிபிசியின் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது தொடர்பாக, அகில பாரத வித்தியார்த்தி பரிசத்(ABVP) அமைப்பானது பல்கலைக்கழகத்திடம் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

தமிழக மீன்வர்கள் கைது… இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்!தமிழக மீன்வர்கள் கைது… இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்!

தமிழக மீன்வர்கள் கைது… இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்!

சென்னை : இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு…

54 minutes ago
வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதல், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை! தமிழக அரசு விளக்கம்!வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதல், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை! தமிழக அரசு விளக்கம்!

வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதல், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை! தமிழக அரசு விளக்கம்!

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் 2 ஆண்டுகள் கடந்தும்…

1 hour ago
இந்த 4 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை!இந்த 4 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை!

இந்த 4 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை!

சென்னை : கடந்த ஆண்டு அக்.15ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 3 மாதங்களாக நீடித்து வந்து நிலையில்,…

2 hours ago
அன்றும் 2, இன்றும் 2! இதுதான் பாமக-வின் வளர்ச்சியா? கடுப்பான அன்புமணி!அன்றும் 2, இன்றும் 2! இதுதான் பாமக-வின் வளர்ச்சியா? கடுப்பான அன்புமணி!

அன்றும் 2, இன்றும் 2! இதுதான் பாமக-வின் வளர்ச்சியா? கடுப்பான அன்புமணி!

சேலம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்ட கட்சி ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. …

2 hours ago
தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு… ‘ChatGPT’ பற்றிய தமிழக அரசின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு!தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு… ‘ChatGPT’ பற்றிய தமிழக அரசின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு!

தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு… ‘ChatGPT’ பற்றிய தமிழக அரசின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு!

சென்னை :  கோயம்புத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில்முனைவோருக்கான “ChatGPT”…

2 hours ago
விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 புதிய திட்டங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 புதிய திட்டங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 புதிய திட்டங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விழுப்புரம் :  மாவட்டம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் இட…

4 hours ago