வரும் திங்கள் அன்று நாடு முழுவதும், ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை கொண்டாட பக்தர்கள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இதற்கான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். அங்கு லால்பாக்ஷா விநாயகர் மிகவும் பிரபலமானவர். அதேபோல ஹைதராபாத்தில் கைராபாத் விநாயகர் மிகவும் பிரபலமானவர். அங்கு செய்யப்படும் சிலை வருட வருடம் உயரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த வருடம் விநாயகர் சிலையின் உயரம் 61 அடியாகும். இந்த விநாயகர் சிலையை 12 தலைகள், 24 கைகள் உடன் ஏழு குதிரைகள் கொண்ட பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இந்த விநாயகருக்கு சூரிய விநாயகர் என பெயரிட்டுள்ளனர். இச்சிலையை தயாரிக்க 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்கு மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். 50 டன் எடையுள்ள இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் வழிபாட்டிற்கு கொண்டுவரவுள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…