ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : கடந்த முறை 4 வார்டுகள் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக! இந்த முறை 48 வார்டுகளில் வெற்றி!

Default Image

கடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில் ஹைதராபாத்தில் உள்ள 30 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 150  வார்டுகளில் 1,122 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 18,152 அரசு ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிலாக, வாக்கு சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற்றதால், வாக்கு எண்ணிக்கை முடிய கொஞ்சம் தாமதம் ஆனது. காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, இதில் பாஜக ஆளும் கட்சியை விட அதிக வாக்குகள் பெற்றது.

இதனை தொடர்ந்து, நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக மற்றும் ஆளும் கட்சியான டிஆர்எஸ் இடையே தொடக்கத்திலிருந்தே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், சில வார்டுகளில் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும், பாஜகவுக்கும் இழுபறி நீடித்தது. மொத்தம் 150 வார்டுகளில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் வெற்றி பெற்றது. பாஜக 48 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி இரண்டு வார்டுகளை மட்டுமே கைப்பற்றியது.கடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்