கள்ளக்காதலிக்கு மனைவியின் போலீஸ் சீருடையை திருடி கொடுத்த கணவர்!

Default Image

மத்திய பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர ராய்.இவரது மனைவி அதே மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவருக்கு மஸ்கீட் சங்கீதா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது.

அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.சங்கீதாவின் மீது உள்ள மயக்கத்தால் அவரது மாணவியை பிரிந்து விட்டு சங்கீதாவுடனே வாழ முடிவு செய்துள்ளார்.ஆனால் வாழ்வதற்கு பணம் தேவை என்று எண்ணிய ராய்க்கு வித்தியாசமான யோசைனைகள் தோன்றியுள்ளனர்.

அவர் தனது மனைவியின் காவல் சீருடையை திருடி சங்கீதாவிடம் கொடுத்துள்ளார்.இதுமட்டுமில்லாமல் சங்கீதாவிற்கு போலி அடையாள அட்டைகளையும் தயார் செய்து கொடுத்துள்ளார்.

அவற்றை பயன்படுத்தி சங்கீதா அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.இந்த சம்பவம் காரணமாக மனைவிக்கு தெரியவந்துள்ளது.அப்போது அவர் சங்கீதாவி கையும் களவுமாக பிடித்து அதற்க்கு காரணமாக இருந்த தனது கணவரையும் கைது செய்துள்ளார்.

அவர்களிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.காவல்துறையினரின் சீருடையை தனது கள்ளக்காதலுக்கு கணவரே திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்