தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவர் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை வற்புறுத்து குடிக்கச் சொல்லியதால் அப்பெண் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் பகுதியில் வசித்து வரக்கூடிய தருண் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பதாக கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்யாணி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து தருண் கல்யாணி அழகாக இல்லை என்று கூறி அவரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், உங்கள் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சினை வாங்கி வா என அடிக்கடி அவளை அடித்ததாகவும், இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தருண் கல்யாணியை கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதனை குடித்த கல்யாணி சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்உடல்நிலை , சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். பின் கல்யாணியின் உறவினர்கள் தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இந்திய தண்டனை சட்டம் 302, 304b மற்றும் 498 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், தலைமறைவாக உள்ள தருணை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…