மனைவியை போட்டு தள்ள நண்பனுக்கு 5000 கொடுத்த கணவர், சிறையில் உயிரிழந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள விஜாபூர் மேக் எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்த சுரேஷ் என்பவருக்கும் அவரது மனைவி குந்தாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், சுரேஷுக்கு மனைவி மீது வெறுப்பு ஏற்பட்டு தனது மனைவியை போட்டு தள்ள முடிவு எடுத்துள்ளார். இதற்காக தனது நண்பர் சம்பூர் என்பவருக்கு 5,000 ரூபாய் பணம் கொடுத்து எவ்வாறு கொலை செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அவரும் குந்தவை வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்துள்ளார்.
கொலைக்கு பிறகு இருவரும் தலைமறைவாகிய நிலையில், சிறிது காலத்திற்குப் பிறகு கணவர் சுரேஷ் மட்டும் போலீசில் பிடிபட்டு கடந்த சில வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் அண்மையில் உடல் நலக்குறைவால் சிறையிலேயே உயிரிழந்துள்ளார். 20 வருடங்களுக்குப் பிறகு தலைமறைவாக இருந்த ஷாம்புவை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இடைப்பட்ட காலங்களில் வேறு ஏதேனும் குறைகள் குற்றங்கள் எதுவும் செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…