தூக்கத்தில் எழுப்பிய மனைவியை அடித்து உதைத்த கணவன்.!
- குஜாராத்தில் பாவ்னா சவ்கான் என்ற பெண் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு மீண்டும் தனது வீட்டிற்க்கு வந்து உள்ளார்.
- அவரது கணவன் கதவை பூட்டிவிட்டு தூங்கி கொண்டு இருந்தார்.இதனால் கதவை தட்டி உள்ளார்.எழுந்த வந்த கணவன் மனைவியை பலமாக தாக்கி உள்ளார்.
குஜாராத் மாநிலம் தல்தெஜ் பகுதியை சேர்ந்தவர் பாவ்னா சவ்கான் சில நாள்களுக்கு முன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதை தொடர்ந்து கடந்த 15-ம் தேதி இரவு 11 மணிக்கு மீண்டும் தனது வீட்டிற்க்கு வந்து உள்ளார்.ஆனால் அவரது கணவன் கதவை பூட்டிவிட்டு தூங்கி கொண்டு இருந்தார்.
இதனால் பாவ்னா சவ்கான் பலமுறை கதவை தட்டி உள்ளார். அவரது கணவன் கதவை திறந்தகவில்லை. இதனால் கோபம் அடைந்த மனைவி கணவனை சத்தமாக கூப்பிட்டு உள்ளார். தூக்கத்தில் இருந்த கணவர் கதவை திறக்கவில்லை.
மேலும் கதவை பலமாக பாவ்னா சவ்கான் தட்டி உள்ளார். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை திறந்த கணவர் இரவில் வந்து இப்படி தூக்கத்தை தொந்தரவு செய்கிறாயே என மனைவியை பலமாக தாக்கி உள்ளார்.
அடி தாங்க முடியாமல் பாவ்னா சவ்கானின் சத்தம் போட்டு உள்ளார். பாவ்னா சவ்கான் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து கணவர் மீது பாவ்னா சவ்கான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.