மனைவி ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை எனும் ஆத்திரத்தில் பஞ்சாபை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவி மீது ஆசிட் வீசி கொல்ல முயற்சி செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா என்னும் மாவட்டத்தில் உள்ள விவசாயி ஒருவர் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அவர் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை எனும் ஆசையில் தனக்கு இன்னும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பியுள்ளார். இதனையடுத்து தனது மனைவியிடமும் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையை கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி மனக்கசப்பும் எழுந்துள்ளது.
இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மாலை நேரத்தில் அவர் மது அருந்திவிட்டு தனக்கு இருந்த விரக்தியில், ஆசிட் பாட்டில் ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதன்பின் அவரது மனைவி எதிராக வந்த பொழுது ஆசிட்டை எடுத்து அவரது மனைவியின் முகம் மற்றும் கழுத்தில் ஊற்றியுள்ளார். இந்த தாக்குதலில் அவரது மனைவிக்கு 60% உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் அண்டை வீட்டுக்காரர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவி ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக ஆசிட் வீசிய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரை தேடி வருகின்றனர்.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…