கணவர் என்னுடன் சண்டையிடுவதே இல்லை- விவாகரத்து கேட்டு விண்ணப்பம் செய்த பெண்!
கணவரின் அதிக அன்பால் விவாகரத்து கேட்டு நீதிபதிகளை குழப்பத்துக்குள்ளாகியுள்ள பெண்ணின் செயல் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பால் எனும் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனக்கு விவாகரத்து வேண்டும் என ஷரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் விவாகரத்துக்கான காரணம் என்ன என்று அறிந்த நீதிபதிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். அதாவது அந்தப் பெண்ணின் கணவர் அவளை அதிகமாக நேசிப்பதாலும், அவளுடன் சண்டை இட்டுக் கொள்வதில்லை எனும் காரணத்திற்காகவும் அந்தப் பெண் திருமணமான 18 மாதங்களிலேயே விவாகரத்துக்காக நீதிமன்றத்தை அணுகி உள்ள செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.
மீண்டும் அவரிடம் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? கணவரை கொச்சைப் படுத்த விரும்பாமல் மறைக்கிறீர்களா? என கேட்டபோது இல்லை, திருமணமாகி இத்தனை காலத்தில் அவர் என்னுடன் சண்டை போடுவதே இல்லை. நான் தப்பு செய்தாலும் உடனே மன்னித்து விடுகிறார். அது மட்டுமல்லாமல் சில சமயங்களில் வீட்டு வேலைகளை கூட அவரே செய்கிறார். இப்படி வாழக்கூடிய வாழ்க்கையில் எனக்கு விருப்பமில்லை, எனக்கு இந்த வாழ்க்கை தேவையில்லை என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து குழப்பமடைந்த நீதிபதிகள் அந்த பெண்ணின் கணவரிடம் கேட்டபோது அவர் வழக்கை திருப்பித் தருமாறும், தான் தனது மனைவியை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நீதி செய்ய முடியாமல் அவர்களிடம் பரஸ்பரமாக இதை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு உள்ளனர்.