இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவின் ஆபத்துகளை பற்றி தனது கர்ப்பிணி மனைவி பேசும் வீடியோவை ரவிஷ் சாவ்லா பதிவேற்றியுள்ளார்.
மருத்துவர் டிம்பிள் அரோரா 7 மாத கர்ப்பிணி பெண் ஆவார். இவர் ஏப்ரல் 11-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது இயலாமையிலும் ஏப்ரல் 17-ஆம் தேதியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘கொரோனாவை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மோசமான அறிகுறிகள் உள்ளதால் என்னால் பேச முடியவில்லை. உங்கள் அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் மக்களுடன் தொடர்பு கொள்ளும்போது தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த அறிகுறிகள் யாருக்கும் வருவதையும் நான் விரும்பவில்லை. தயவுசெய்து பொறுப்பற்றவராக இருக்காதீர்கள். ஏனென்றால் உங்கள் வீட்டில் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உள்ளனர். நான் எப்போதும் வேலை செய்து கொண்டு இருந்தேன். நான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன். ஆனால், தற்போது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை அப்பெண்ணின் கணவர் ரவிஷ் சாவ்லா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் வெளியிட்டு, ஏப்ரல்-26 அன்று அவள் இறந்து விட்டாள். பிறக்காத குழந்தையையும் நான் இழந்து விட்டேன். இவ்வளவு துன்பத்தின் போது கூட, அவள் இந்த வீடியோவை வெளியிட்டதற்கு காரணம், இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.’ என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் தனது தாயை கேட்கும் போது ஒவ்வொரு முறையும், எனது இதயம் உடைக்கப்படுகிறது. இந்த இறப்பை குறித்து எனது மகனுக்கு புரிய வைப்பதற்கு எனது மகனுடைய வயது போன போதுமானதாக இல்லை. அவள் கர்ப்ப காலத்தில் வெளியேறும் போது இரண்டு அல்லது மூன்று முக கவசங்கள் மற்றும் சில நேரங்களில் பிபிஇ கிட் கூட அணிந்து கொண்டு தான் வெளியே செல்லுவார் என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…