பல் துலக்காமல் முத்தம்…. மனைவியை கொன்ற கணவன் கேரளாவில் விபரீதம்.!

Default Image

கேரளாவின் பாலக்காட்டில் செவ்வாய்கிழமையன்று தந்தை ஒருவர் தனது கைக்குழந்தைக்கு பல் துலக்காமல் முத்தமிட்டதற்கு மனைவி திட்டியதால் அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை, தீபிகா தனது கணவர் அவினாஷ் இரண்டரை வயது மகனுக்கு பல் துலக்காமல் முத்தமிட்டதை பார்த்து கண்டித்துள்ளார்.சிறிது நேரத்தில் தம்பதியினரிடையே வார்த்தைப் போர் வெடித்ததால், அவினாஷ் தீபிகாவை கத்தியால் தாக்கினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீபிகாவை காப்பாற்றியுள்ளனர். உடனடியாக அவரை பெரிந்தல்மன்னா அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

போலீசார் அவினாஷை கைது செய்துள்ளனர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்த அவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பாலக்காடு திரும்பினார்.தாய் மற்றும் தனத்தை இருவரின் முன் கோபத்தால் குழந்தை இன்று நிர்க்கதியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்