புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் விபூதி சங்கர் மனைவி ராணுவத்தில் இணைந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா வில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் கொல்லப்பட்டார். இவரை கவுரவிக்கும் வண்ணமாக. கடந்த 2019-ம் ஆண்டு, ஷவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.
திருமணமான 9 மாதங்களிலேயே தனது கணவரான மேஜர் விபூதி சங்கர் இறந்த நிலையில், நிக்கிதா சோர்ந்து விடாமல் தொடர்ந்து ராணுவத்தில் சேருவதற்கான பணிகள் இறங்கினார். முதலில் ராணுவத்தில் சேருவதற்கான தகுதி தேர்வு எழுதினார். பின் அதில் தேர்ச்சி பெற்ற அவர், நேர்முகத் தேர்விலும் தகுதி பெற்றார். இதனையடுத்து சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தனது பயிற்சிகளை தொடங்கினார்.
ராணுவத்தில் சேர்ந்து பயிற்சிகளை முடித்த அவர், இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியிடம் ஸ்டார்களை வாங்கியுள்ளார். இது குறித்து ராணுவ அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், நிக்கிதா, கம்பீரமாக ராணுவ உடையில் நடந்து தோள்களில் ஸ்டார்களை பெற்றுக் கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…