உயிருக்கு போராடும் கணவன்…! உயிரணுவை சேகரிக்க அனுமதி கோரும் மனைவி…! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கணவரிடம் உயிரணுவை சேகரிக்க அனுமதி கோரி குஜராத் நீதிமன்றத்தில் மனு அளித்த பெண்.
குஜராத்தில் நீதிமன்றத்தில் பெண்ணொருவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், கடந்த மே 10-ம் தேதி, தனது கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வதோதராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நுரையீரல் செயலிழந்துள்ள நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் இல்லாத நிலையில் நீதிமன்ற உத்தரவு தேவை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து குஜராத் நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்த நிலையில், மிகவும் அசாதாரணமான சூழலில், கணவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரது உயிர் அணுவை மருத்துவ முறைப்படி சேகரிக்க அனுமதி அளித்துள்ளது.
ஆனாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவரின் விந்தணுக்களை சேமித்து பாதுகாக்க முடியுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.