குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் வேஜல்பூர் பகுதியை சார்ந்தவர் நர்ஸ் தஸ்லிமா. இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த ஆண்டு அன்சாரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அன்சாரி ஏற்கனவே 2 திருமணம் ஆகி மனைவி விவாகரத்து செய்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அன்சாரி இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வருவதாக தஸ்லிமாக்கு சந்தேகம் வந்தது.இது தொடர்ந்து அன்சாரியை தஸ்லிமா கவனிக்கத் தொடங்கினார்.
ஆனால் அன்சாரி வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. வேலை இல்லாமல் இருக்கும் அன்சாரி நேற்று முன்தினம் தஸ்லிமாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே அன்று இரவு தஸ்லிமாவின் நாக்கில் முத்தம் தருவதாக அன்சாரி கூறியுள்ளார். சரி சமாதானமாக போகலாம் என நினைத்து தஸ்லிமா தனது நாக்கை நீட்டி உள்ளார்.
அப்போது அன்சாரி அருகில் வந்து நாக்கில் முத்தம் கொடுத்துவிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தஸ்லிமாவின் நாக்கை வெட்டிவிட்டார். இதில் துண்டாகி விட்டது இதைத்தொடர்ந்து அன்சாரி வீட்டின் பூட்டி விட்டு ஓடிவிட்டார். பின்னர் தஸ்லிமா வீடியோ கால் மூலமாக தங்கைக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் விரைந்து வந்து வீட்டின் கதவை திறந்து தஸ்லிமாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நாக்கை ஒட்டி உள்ளனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…