ஹரியானா மாநிலம் ச்ஹாச்ராவுலி பகுதியில் இருக்கும் மாலிக்பூர் காதர் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஃபாம் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. ஆனால், தனக்கு கிடைத்த மனைவி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என அவர் கனவிலும் கூட இப்படி நடக்கும் என்று நினைத்திருக்கமாட்டார். திருமணம் முடிந்து முதலிரவு அன்று அவரது மனைவி, தனது கணவரிடம் மனம் திறந்து பேசியுள்ளார். தான் திருமணத்திற்கு முன்பாக எனக்கு கணவராக வருபவர் பற்றி பல கனவுகள் இருப்பதாகவும், அதில் குறிப்பாக குல்ஃபாமின் தாடி, மீசை, ஆகியவை தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், நான் படித்த நல்ல குடும்பத்தில் இருந்து வந்துள்ளதாகவும், இந்த வீட்டில் வசதிகள் எதுவும் இல்லை என்றும் மனைவி கூற, அதை கணவர் பொறுமையாக அனைத்தையும் கேட்டுள்ளார். பின்னர் தனது கனவுக்கு ஏற்ப கணவர் மாற வேண்டும் என்றும் மனைவி கோரிக்கை வைத்துள்ளார். மனைவியின் கோரிக்கையை பொறுமையாக கேட்டுக்கொண்ட குல்ஃபாம், உனக்கு பிடித்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்வதாக உறுதியளித்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். ஆனால், இதன் பின்னரே திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது முதலிரவு முடிந்த பின்னர், குல்ஃபாம் மனைவியிடம், நான் தன்னுடைய விருப்பப்படியே இருப்பேன், எதையும் உனக்காக மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று கூறி தூங்கச் சென்றுள்ளார். பின்பு விடிந்ததும் எழுந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி அவரது அறையில் இல்லை. பின்னர் விசாரித்த போது மனைவி அவரின் பிறந்த வீட்டுக்கே சென்றுள்ளார், என தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து குல்ஃபாமின் போலீஸில் புகார் அளித்துள்ளார், பின்னர் அவரது மனைவியின் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…