மனைவியை கடித்த நாயை சுட்டுக்கொன்ற பாசக்கார கணவர் கைது!

- மத்திய பிரதேசத்தில் தனது மனைவியை கடித்து குதறிய நாயை துப்பாக்கி வைத்து சுட்டுக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்
- அவரிடமிருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் எடுத்த சுதாமா எனும் நகரில் வசித்து வரக்கூடிய நரேந்திர விஷ்னோய் என்பவரின் மனைவியை அவரது அண்டை வீட்டுக்காரரான மருத்துவர் வினித் என்பவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. நாய் கடித்ததால் வலி தாங்காமல் விஷ்னோய் மனைவி அலறி துடித்து வீட்டிற்குள் வந்துள்ளார். அதைப் பார்த்து கோபமடைந்த அவரது பாசக்கார கணவர் விஷ்னோய் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அந்த நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த நாயின் உரிமையாளர் வினித் தனது வளர்ப்பு நாயை சுட்டது அண்டை வீட்டுக்காரர் விஷ்னோய் தான் என்பதை அறிந்து அவர் மீது துவாரகாபுரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் நரேந்திர விஷ்னோய் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025