ஆக்ராவில் வீசிய சூறாவளி காற்று.. தாஜ் மஹாலில் லேசான சேதம்.!

ஆக்ராவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வீசிய புயலில் தாஜ்மஹாலில் சில பகுதிகளில் சேதமடைந்தது.
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் யமுனை நதிக்கரையோரம் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மஹால் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதனால் தாஜ் மஹாலில் சில பகுதிகளில் சேதமடைந்தது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தொல்பொருள் துறை கண்காளிப்பாளர் பசந்த் குமார் ஸ்வர்ணாகர், அங்கு சேதமடைந்தது குறித்து ஆய்வு நடத்தினார். அதன்பின், மார்பிள் கைப்பிடியும், 2 சிகப்பு மணற்கல் திரையும், சேதமடைந்ததாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, மேற்கு வாசல், டிக்கெட் விநியோகிக்கும் பகுதி, பிரதான கல்லறை பகுதி மற்றும் தோட்டத்தில் மரங்கள் முறிந்தால் தோட்டம் பலத்த சேதமடைந்தாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025