சூப்பர் தேர்தல் ஆணையமாக மனித உரிமைகள் ஆணையம் மாற வேண்டாம்.. உச்சநீதிமன்றம் அதிருப்தி.!

இந்த மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பல்வேறு வன்முறை சம்பவங்கள், உயிரிழப்புகள் நேர்ந்தன. இதனை குறிப்பிட்டு, மேற்கு வங்க தேர்தலில் மனித உரிமை மேற்படுவதாக கூறி, மனித உரிமைகள் ஆணைய நிர்வாகிகளை தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கும் பொருட்டு தேசிய மனித உரிமை ஆணையம் கொல்கத்தா உச்சநீதிமன்றத்தை நாடி இருத்தது.
ஆனால் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, தேசிய மனித உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
அதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, தேசிய மனித உரிமை ஆணையம் ‘இந்தியாவின் சூப்பர் தேர்தல் ஆணையமாக’ மாற முடியாது. என்றும், மனித உரிமை ஆணையம் தேவைப்படும் இடத்தில் அடியெடுத்து வைத்தால் அதை நாங்கள் பாராட்டுவோம். மற்ற துறையின் அதிகார வரம்பிற்குள் நுழைவதை ஏற்க முடியாது.
இந்தியாவில் மனித உரிமைகள் தலையிடுவதற்கு பல விவகாரங்கள் உள்ளன. அதனை விடுத்து, வேறு சில இடங்களில் அதைச் செய்து, மற்ற துறையின் அதிகார வரம்பிற்குள் நுழைய முயற்சிக்கிறது என கடுமையாக சாடி வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.