மும்பையில் பரபரப்பு.. ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல்!

மும்பை : ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்ததை கண்டு பெண் மருத்துவர் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். மும்பை புறநகரான மலாட் பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து மருத்துவர், அப்பகுதியின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர், பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், யம்மோ (Yummo) ஐஸ்கிரீம் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஐஸ்கிரீம் மாதிரி தடயவியல் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல் எப்படி வந்திருக்க முடியும் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக புகாரளித்த 26 வயதான மருத்துவர், ‘Yummo’ ஐஸ்கிரீம் நிறுவனத்தில் இருந்து பட்டர்ஸ்காட்ச் கொண் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்திருக்கிறார்.
மதிய உணவுக்குப் பிறகு, அந்த ஐஸ்கிரீமை உட்கொண்டிருக்கும் போது, ஒரு ஆணியுடன் கூடிய ஒரு அங்குல நீளமான மணித விரலின் சதையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அது மனித விரல் தானா? என சந்தேகிக்கப்படும் சதைத் துண்டின் உண்மை தன்மையை அறிய தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025