ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி
ராமர் கோவில்கட்ட அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.நில பிரச்சினை காரணமாக ,2010-ஆம் ஆண் டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது நீதிமன்றம்.மேலும் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே அயோத்தியில் உருவாகும் மிகப்பெரிய ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .மிகப்பிரமாண்டமான முறையில் கோவிலை 3 ஆண்டுகளுக்குள் ராமர் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே ராமர் கோயில் கட்ட ஸ்ரீராமஜென்ம பூமி என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை வங்கி கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கில் மோசடியாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது . போலி காசோலைகள் மூலமாக இரண்டு வங்கிகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே மோசடி குறித்து அயோத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.