ஹுடா சிட்டி சென்டர் – சைபர் சிட்டி மெட்ரோ இணைப்பு..! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
குருகிராம், ஹுடா சிட்டி சென்டரில் இருந்து சைபர் சிட்டி வரை மெட்ரோ இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஹுடா சிட்டி சென்டரில் இருந்து சைபர் சிட்டி வரை மெட்ரோ இணைப்பிற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ.5,450 கோடி ஆகும்.
80 கி.மீ வேகத்தில் இந்த மெட்ரோ 28 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த மெட்ரோ செல்லும் பாதையில் 27 ரயில் நிலையங்கள் உள்ளன. ஹரியானா மாஸ் ரேபிட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (HMRTC) மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை நான்கு ஆண்டுகளில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.