மும்பையில் ரூ.30க்காக HR மேலாளருக்கு கத்தரிக்கோலால் குத்து..!
மும்பையில் HR மேலாளர் தனது உடையை மாற்றியமைத்ததற்கான கூடுதலாக ரூ.30 கொடுக்க மறுத்ததால் தையல்காரரால் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டார்.
அந்தேரி கிழக்கில் வசிக்கும் ரோஹித் யாதவ், 30 கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது புதிய பேண்ட்டை அதன் நீளத்தைக் குறைக்க தையல்காரர் ஹரிஷிடம் மாற்றுவதற்காகக் கொடுத்தார். பேண்ட்டை குறைக்க ரூ.100 செலவாகும் என கூற யாதவும் ஒப்புக்கொண்டார். பிற்பகலில் யாதவின் பேண்ட் தயாரானதும் தையல்காரர் யாதவை கடைக்கு வர சொன்னார்.
முன்கூட்டியே பேசியபடி ரூ.100க்கு பதிலாக ரூ.130 தர வேண்டும் என்றும், அவசரமாக டெலிவரி செய்வதற்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக தையல்காரர் ஹரிஷ் கூறினார். எனினும் யாதவ் கூடுதலாக ரூ.30 கொடுக்க தர மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
யாதவ் ரூ.100 செலுத்தி கடையை விட்டு வெளியேறியபோது வாக்குவாதம் மேலும் அதிகரித்தது. உடனே யாதவை பின்தொடர்ந்து சென்று சிறிய கத்தரிக்கோலால் யாதவை மிரட்டி உள்ளார். அப்போது திடிரென யாதவின் வயிற்றிலும், முதுகிலும் தோளிலும் தையல்காரர் ஹரிஷ் குத்தினார்.
யாதவ் சத்தம் கேட்டு அருகில் இருந்த மற்றொரு கடைக்காரர் வந்தார். அவர் வருவதை பார்த்த தையல்காரர் ஹரிஷ் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடினார். பின்னர், யாதவ் மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டார். இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் வயிறு, முதுகு மற்றும் தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அந்தேரி போலீசார் டிரெய்லர் ஹரிஷ் தாக்கரை கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்தனர்.