மக்களவை தேர்தல்: வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அறிவது எப்படி?

Election Commission: மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளதா மற்றும் அதை எப்படி மக்கள் அறிவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Read More – இரு மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம்! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முக்கியமாக குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அது குறித்து மக்களுக்கு விரிவான தகவல்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தங்கள் தேர்தல் பிரசார காலத்தில் 3 முறை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

Read More – அம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு..! திருச்சியை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது

இதைப் போல வேட்பாளரை களமிறக்கும் அரசியல் கட்சிகளும் அவர்களது குற்றப் பின்னணி விவரங்களை இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள், தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்