Categories: இந்தியா

இலவச சூரிய மின்சார திட்டம்…ரூ.78,000 மானியம்.! விண்ணப்பிப்பது எப்படி?

Published by
கெளதம்

Suryoday Yojana 2024: அண்மையில் மத்திய அரசு ஒரு அற்புதமான திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் பெயர், சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் “பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா” திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், 1 கோடி வீடுகளில் மேற்கூரை சோலார் பேனல்களை நிறுவுவதாகும்.

இதன் முலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோவாட் திறன் கொண்ட ஆலைக்கு ரூ.30 ஆயிரம் மானியமும், இரண்டு கிலோவாட் திறன் கொண்ட ஆலைக்கு ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்கப்படும். அந்த மானியத் தொகை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட பிறகு, மக்கள் தங்கள் மின் கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும்.மேலும் இதனால், பலரது வருமானம் சேமிப்பாக அமையும். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவில் பலர் ஆர்வமாக உள்ளனர்.

நீங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், Suryoday Yojana  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்க வேண்டும்.

மானியம்:

1 கிலோவாட் மின்சாரத்திற்கு – ரூ.30,000
2 கிலோவாட் மின்சாரத்திற்கு – ரூ.60,000
3 கிலோவாட் அதற்கு மேல் –  ரூ.78,000

தேவைப்படும் ஆவணங்கள்

  1. ஆதார் அட்டை
  2. வீட்டு முகவரி சான்றிதழ்
  3. மின் கட்டண நகல்
  4. வருமான சான்றிதழ்
  5. மொபைல் எண்
  6. வங்கி பாஸ்புக்
  7. ரேஷன் கார்டு
  8. பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம்

இந்த ஆவணங்கள் இல்லையென்றால், உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படாது.

தகுதி

  • அரசு வேலை பார்ப்பவர்கள் மந்திரி சூர்யோதயா யோஜனாவிற்கு விண்ணப்பிக்க முடியாது.
  • இந்த திட்டத்தின் பலன்களை இந்திய மக்கள் மட்டுமே பெற முடியும்.
  • உங்கள் ஆண்டு வருமானம் ரூ. 1 அல்லது 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • இத்திட்டத்தை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமே பெற முடியும்.

Recent Posts

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

50 mins ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

2 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

2 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

2 hours ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

3 hours ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

3 hours ago