இலவச சூரிய மின்சார திட்டம்…ரூ.78,000 மானியம்.! விண்ணப்பிப்பது எப்படி?
Suryoday Yojana 2024: அண்மையில் மத்திய அரசு ஒரு அற்புதமான திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் பெயர், சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் “பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா” திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், 1 கோடி வீடுகளில் மேற்கூரை சோலார் பேனல்களை நிறுவுவதாகும்.
இதன் முலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோவாட் திறன் கொண்ட ஆலைக்கு ரூ.30 ஆயிரம் மானியமும், இரண்டு கிலோவாட் திறன் கொண்ட ஆலைக்கு ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்கப்படும். அந்த மானியத் தொகை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட பிறகு, மக்கள் தங்கள் மின் கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும்.மேலும் இதனால், பலரது வருமானம் சேமிப்பாக அமையும். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவில் பலர் ஆர்வமாக உள்ளனர்.
நீங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், Suryoday Yojana என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்க வேண்டும்.
மானியம்:
1 கிலோவாட் மின்சாரத்திற்கு – ரூ.30,000
2 கிலோவாட் மின்சாரத்திற்கு – ரூ.60,000
3 கிலோவாட் அதற்கு மேல் – ரூ.78,000
தேவைப்படும் ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- வீட்டு முகவரி சான்றிதழ்
- மின் கட்டண நகல்
- வருமான சான்றிதழ்
- மொபைல் எண்
- வங்கி பாஸ்புக்
- ரேஷன் கார்டு
- பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம்
இந்த ஆவணங்கள் இல்லையென்றால், உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படாது.
தகுதி
- அரசு வேலை பார்ப்பவர்கள் மந்திரி சூர்யோதயா யோஜனாவிற்கு விண்ணப்பிக்க முடியாது.
- இந்த திட்டத்தின் பலன்களை இந்திய மக்கள் மட்டுமே பெற முடியும்.
- உங்கள் ஆண்டு வருமானம் ரூ. 1 அல்லது 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- இத்திட்டத்தை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமே பெற முடியும்.