கர்ப்பிணி பெண்களே…ரூ.5,000 உதவித் தொகை பெறுவது எப்படி.? இதோ முழு விவரம்…
PMMVY: கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறந்த பின், ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் நோக்கத்துடனும் தாய்-சேய் பராமரிப்பை ஊக்குவிப்பதற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதன்முதலில் இந்திரா காந்தி மாத்ரு சஹாயோக் யோஜனா என 2010 இல் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், தகுதியான நபர்கள் ரூ. 5,000 ஊக்கத்தொகையை மூன்று தவணை மூலம் பெற முடியும்.
இதனை பெறுவதன் மூலமாக பிரசவத்தின் போதும் அதற்குப் பின்னரும் ஏற்படும் நிதி இழப்பீட்டை சரிசெய்ய இந்த திட்டம் உதவுகிறது.
பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனாவின் பலன்கள்
- இத்திட்டத்தின் கீழ், ரூ.5,000 ரூபாய் உதவித் தொகையாக மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.
- கர்ப்பத்தைப் பதிவு செய்யும் போது முதல் தவணையாக 1000 ரூபாய் வெளியிடப்படுகிறது.
- இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் கர்ப்பமாகி 6 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படுகிறது.
- பிரசவம், குழந்தையின் பதிவு மற்றும் தடுப்பூசி மற்றும் தடுப்பூசியின் முதல் சுழற்சியைப் பெற்ற பிறகு மூன்றாவது தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.
- கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.1,000 ஜனனி சுரக்ஷா யோஜனாவின் (JSY) கீழ் நிறுவன பிரசவத்திற்குப் பிறகு பெற்று கொள்ளலாம்.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பின்வரும் சில தேவையான ஆவணங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- கர்ப்பிணிப் பெண்ணின் ஆதார் அட்டை
- சாதி சான்றிதழ்கள்
- கர்ப்ப ஆதார சான்றிதழ்
- பான் கார்டு
- கர்ப்பிணிப் பெண்ணின் வங்கிக் கணக்கு
- மொபைல் எண்
இந்த திட்டதிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
- பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா2024 க்கு விண்ணப்பிக்க, நீங்கள் முதலில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில் நுழைந்து மின்னஞ்சல், கடவுச்சொல் போன்ற அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.
- நீங்கள் உள்நுழைந்து இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.