குழந்தைகளை வளர்க்கும்போது பெற்றோர்கள் எப்படி இருக்கவேண்டும் ..!இந்த உலகை ஆளப்போகிறவர்கள் குழந்தைகள் ..!
ஒரு வருடத்தில் எத்தனை தினங்கள் வந்தாலும் நாம் மனதில் நவம்பர் மாதம் என்றால் நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இந்த தினத்தை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.எதிர்காலத்தில் இந்த உலகை ஆளப்போகிறவர்கள் குழந்தைகள்தான் என பெரியவர்கள் கூறுவதால் குழந்தைகளை மகிழ்விக்க குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
வெள்ளை மனம் கொண்ட குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.
நேரு 1889 நவம்பர் 14-ம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகள், இளைஞர்களின் கல்வி, முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை நிறைவேற்றினார்.நேரு பணியின் இடையில் குழந்தைகளுடன் பேசுவது வழக்கமாக கொண்டு இருந்தார்.
குழந்தைகள் மீது நேருவிற்கும் நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு இருந்ததால் தான் நேரு பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.குழந்தைகள் தினம் அன்று பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, கவிதை , ஓவிய போட்டி என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.
தற்போது இந்தியாவில் அதிக குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல் அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற வேண்டும் என்பதே இந்த குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.
பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்போது குழந்தைகளோடு குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்களை நாளைய வெற்றியாளராக வருவார்கள். குழந்தைப் பருவத்தில் கற்றுக் கொள்ளும் சின்ன சின்ன விஷயங்கள்தான்அவர்களின் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும். பெற்றோர்கள் குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.
தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.ஒவ்வொரு குழந்தைக்கும் கண்டிப்பாக ஒரு கனவு இருக்கும். பெற்றோர் அதை தெரிந்துகொண்டு நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.தினச்சுவடு சார்பாக அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.