உலக நண்பர்கள் தினம் கொண்டாட்டம் உருவானது எப்படி !

Default Image

ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் அம்மா,அப்பா ,சகோதரர்கள் உறவை போன்று நண்பர்கள் என்பதும் இன்றியமையாத்தாய் அமையும். அப்படி உன்னதமான உறவாய் அமைந்த நண்பருக்குக்காக உலகம் ஆண்டு தோறும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

முதன் முதலில்…

உலக நண்பர்கள் தினம் முதல் முதலாக அமெரிக்காவை சேர்ந்த ஜாய்ஸ் ஹால் 1958 கொண்டாடபட்டது. வாழ்த்து அட்டையை தம் நண்பனுக்கு குடுத்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தொடங்கிய இந்த தினம் பின்னாளில் அமெரிக்காவில் நன்கு வரவேற்பு பெற்றது.

உலக நண்பர்கள் தினம் பற்றிய முறையான அறிவிப்பை அன்றைய ஐ.நா சபையின் தலைவராக இருந்த கோபி அன்னன் மனைவி நானே அன்னன் அவர்கள் வெளியிட்டார். இதன் படி, ஒவ்வொரு ஆங்கில ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்று கிழமைகளில் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.

அந்த அந்த நாடுகளுக்கு ஏற்ப நண்பர்கள் தினமானது  கொண்டாடப்படுகிறது. பிரேசில் மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் ஜூலை 20 ம் தேதி நண்பர்கள் தினம்  கொண்டாடப்படுகிறது.

இந்தியாவிலும் ஒவ்வொரு வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாவது ஞாயிற்று கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 4 ம் தேதி கொண்டாடப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்