பள்ளிகளை எவ்வாறு திறக்க வேண்டும்.? மத்திய அரசுக்கு புதிய அறிவுரை

Default Image

பள்ளிகளை திறந்து மாணவர்களை எந்த வகையில் பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என NCERT (National Council of Educational Research and Training) மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. 

பள்ளி, கல்லூரி தேர்வுகளும் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படுமோ என மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையை, பள்ளிகளை திறந்து மாணவர்களை எவ்வாறு  பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என NCERT (National Council of Educational Research and Training) மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, பள்ளிகள் திறக்கப்பட்டால், முதலில் 11,12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் திறக்கப்பட வேண்டும். அடுத்த வாரம் 9 மற்றும் 10, அதற்கடுத்த 2வது வாரம், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும், 3வது வாரம் 3 முதல் 5 வகுப்பு மாணவர்களையும், ஒருமாதம் கழித்து 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 6 வாரங்களுக்கு பிறகே மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு NCERT அறிவுறுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்