இந்தியாவில் 85 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு -உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்துள்ளது.
நாளுக்கு நாள் புதியதாக கொரோனா தொற்று இந்தியாவில் ஏற்பட்டாலும், முந்தைய நாட்களை கணக்கிடுகையில் தற்பொழுது தினமும் குறைவான அளவே ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில் 8,553,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 126,653 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7,915,660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுமுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 46,661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 491 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர், தற்பொழுது மருத்துவமனைகளில் 511,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.