இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே சென்றாலும், தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த புதிதாக ஏற்படும் தொற்று தற்பொழுது குறைந்த 60 ஆயிரம் முதல் 70 ஆயிரமாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸால் 55,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 7,548,238 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 114,642 பேர் உயிரிழந்துள்ளனர், 773,701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 6,659,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுமுள்ளனர்.