இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எவ்வளவு?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவிலும் 1 லட்சத்து 50 ஆயிரத்தையும் கடந்துள்ளதுடன், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா அலை தான் வீசிக்கொண்டுள்ளது. தற்பொழுது 50 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்து பாதிப்பு சென்றுகொண்டுள்ளது. இந்நிலையில், அதிகமாக கொரோனா பதித்துள்ள 10 நாடுகளில் இந்தியா 10 வது இடத்தில் உள்ளது.
இதுவரை இந்தியாவில் 150,793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4,344 பேர் உயிரிழந்துள்ளனர். நேரு ஒரே நாளில் இந்தியாவில் 5,843 பேர் புதிதாக பாதிப்புள்ளாகியுள்ளதுடன், 172 பேர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் 64,277 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், தற்பொழுது குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர்த்து 82,172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.