இந்தியாவில் தற்பொழுது கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு!
இந்தியாவில் தற்பொழுது கொரோனா பாதிப்பு 77 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் குறைந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 54,482 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 7,759,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 117,336 பேர் உயிரிழந்துள்ளனர், 6,946,325 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 695,979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.