குழந்தைகளின் உயிர் முக்கியமல்ல! இந்திய அணி ஸ்கோர் தான் முக்கியம் !சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
பீகாரில் மூளை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் மூளை காய்ச்சலால் காரணமாக 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
எனவே நேற்று முன்தினம் இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த சமயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருந்தது.மேலும் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது.
பின்னர் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது .அப்போது, பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே இந்திய அணியின் ரன் என்ன என்றும் விக்கெட் என்ன என்றும் அவரது உதவியாளரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவரது உதவியாளர் இந்தியா 4 விக்கெட்கள் 89 ரன்கள் எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே இருந்துகொண்டு, குழந்தைகள் உயிர் சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தில் அமர்ந்து இந்திய அணியின் ரன் கேட்ட அமைச்சரின் இந்த செயல் பலரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.