எந்தெந்த மாநிலங்களில் கொரோனாவால் எத்தனை பேர் பாதிப்பு.!
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் ஒரு மூதாட்டியும், கர்நாடகாவில் ஒரு முதியவரும் உயிரிழந்து, கொரோனா வைரஸால் உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதித்த மாநிலங்கள் : கேரளா 22, மகாராஷ்டிரா 19, ஹரியானா 15, உத்தரபிரதேசம் 11, கர்நாடகா 07, லடாக் 03, ராஜஸ்தான் 03, ஆந்திரா 01, காஷ்மீர் 01, தெலுங்கானா 01, பஞ்சாப் 01, தமிழநாடு 01, என மொத்தம் 85 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே ஒவ்வொரு மாநிலமாக கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அதை பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.