சிறப்பு ரயிலில் எத்தனை பேர் பயணிக்கலாம்.? புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதோ.!

Default Image

சிறப்பு ரயிலில் பயணம் செய்பவர்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நேற்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில சேர்ந்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் கடந்த 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • ஒரு ரயிலில் சுமார் 1,200 பயணிகள் வரை பயணிக்கலாம் என்றும் 90% க்கும் குறையாத அளவுக்கு பயணிகளை ஏற்றி அனுப்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
  • சிறப்பு ரயில்கள் 500 கி.மீட்டருக்கும் அதிகமாக தூரத்துக்கு இயக்கப்படுவதால், இடையில் எந்த இடத்திலும் நிற்காமல் செல்லும். 
  • இதற்கான டிக்கெட்டுகளை ரயில்வே அச்சிட்டு மாநில அரசிடம் வழங்கும். அந்த டிக்கெட்டுகளை பயணம் செய்பவர்களிடம் மாநில அரசு கொடுத்து டிக்கெட் கட்டணத்தை வசூலித்து ரெயில்வேயிடம் வழங்க வேண்டும்.
  • பரிசோதனைக்கு செய்யப்பட்ட பின், பயணம் செய்வதற்கான டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
  • பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை அவர்களை அனுப்பி வைக்கும் மாநில அரசுகளே வழங்கவேண்டும்.
  • முக கவசம் அணிவதும், ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய கேட்டுக்கொள்ள வேண்டும்.
  • பயண நேரம் 12 மணி நேரத்துக்கும் மேல் நீட்டித்தால் ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படும்.
  • பயணிகள் குறிப்பிட்ட இடத்தை சென்று அடைந்ததும் அந்தந்த மாநில அரசு அதிகாரிகள் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை அனுப்பிவைக்க வேண்டும்.
  • இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்