இறுதி சடங்கில் இத்தனை நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.!
இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களை நிர்ணயம் செய்வதற்கு மாநில அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், மதுபான கூடங்கள் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் கல்வி நிறுவனங்கள், வழிபாடு தளங்களுக்கு தடை நீடிக்கிறது எனவும் கூறியுள்ளது. மேலும், இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.