இன்னும் எத்தனை நாட்கள் பிரதமர் மோடி இதனை பேச போகிறார்.? கார்கே காட்டம்.!

Congress Leader Mallikarjun Kharge

டெல்லி: 18வது மக்களவை கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று துவங்கிப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஜூன் 25, 1975ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட எமெர்ஜென்சி பற்றி குறிப்பிட்டு பேசினார்.

பிரதமர் மோடி கூறுகையில், நாளை (ஜூன் 25) இந்திய ஜனநாயகத்தின் மீது கறைபடிந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட நாள் அது. அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக்கப்பட்டது. இதனை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறக்காது. நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்ட நாள். ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்ட நாள் என்று எமர்ஜென்சியை கடுமையாக சாடினார்.

மேலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இதுபோன்ற செயலை மீண்டும் இந்தியாவில் யாரும் செய்ய மாட்டோம் என நாம் தீர்மானம் எடுப்போம். துடிப்பான ஜனநாயகத்தை கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாமானிய மக்களின் கனவுகளை நிறைவேற்ற தீர்மானம் எடுப்போம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி குறிப்பிட்ட எமர்ஜென்சி விமர்சனத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக எதிர்த்தார். இன்னும் எத்தனை காலம் எமர்ஜென்சி பற்றி ஆட்சி செய்ய போகிறார்  என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,  எமர்ஜென்சியை 100 தடவைக்கு மேல் சொல்லி இருப்பார். இதைப் பற்றிப் பேசி எவ்வளவு காலம் ஆட்சி செய்ய வேண்டும்? அரசியலமைப்புச் சட்டத்தை உடைக்க மோடி முயன்றார். அதனால்தான் இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் இங்கு காந்தி சிலை முன்பு ஒன்றுகூடி போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்