இந்த மாதம் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காதா? இதோ விடுமுறை பட்டியல்!
ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்து வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் வேறுபடுகின்றன. வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின் அறிவிப்பையும் சார்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல்
- ஆகஸ்ட் 3, 2020 (திங்கள்) – ரக்ஷா பந்தன்
- ஆகஸ்ட் 11, 2020 (செவ்வாய்) – ஜன்மாஷ்டமி
- ஆகஸ்ட் 30, 2020 (ஞாயிறு) – முஹர்ரம்
ரிசர்வ் வங்கியின் குறிப்பின்படி மேற்கண்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், இந்த மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகள் மூடப்படுகிறது.
- ஆகஸ்ட் 1 – பக்ரீத்
- ஆகஸ்ட் 2 – ஞாயிறு
- ஆகஸ்ட் 3 – ரக்ஷா பந்தன்
- ஆகஸ்ட் 8 – இரண்டாவது சனி
- ஆகஸ்ட் 9 – ஞாயிறு
- ஆகஸ்ட் 11 – ஜன்மாஷ்டமி
- ஆகஸ்ட் 13 – இம்பால் தேசபக்தர்கள் தினம்
- ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 16 – ஞாயிறு
- ஆகஸ்ட் 20 – ஸ்ரீமந்தா சங்கர்டேவ் திதி
- ஆகஸ்ட் 21 – ஹரிட்டலிகா டீஜ்
- ஆகஸ்ட் 22 – கணேஷ் சதுர்த்தி, நான்காவது சனிக்கிழமை
- ஆகஸ்ட் 23 – ஞாயிறு
- ஆகஸ்ட் 29 – கர்மா பூஜை
- ஆகஸ்ட் 30 – மொஹர்ரம்
- ஆகஸ்ட் 31 – இந்திர யாத்திரை மற்றும் திருப்பம்
ஆகிய நாட்கள் வங்கிகளுக்கு இந்த மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.