கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலில் வைரஸ் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும்? மத்திய அரசு தகவல்!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலில் வைரஸ் 9 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைத்துவிட வேண்டும் அல்லது எரித்துவிட வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பார்சி இனத்தவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதோ, புதைப்பதோ இல்லையாம். அவர்கள் ஒரு கட்டிடத்தில் இறந்தவர்களின் உடலை அப்படியே வைத்து விடுவார்களாம்.
அதை பிணம் தின்னும் பறவைகள், விலங்குகள் சிதைக்குமாம். ஆனால் மத்திய அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும் எனக் கூறி உள்ளதால், இது பார்சி இன மக்களின் மரபுக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் உடலில் கொரோனா வைரஸ் ஒன்பது நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளனர்.
எனவே தான் இறந்தவர்களை புதைக்கவும், எரிக்கவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்தவர்களின் உடலிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், பார்சி மக்களின் இறுதி சடங்குகளை கடைப்பிடிக்கும் வகையிலும் சமனான ஒரு வழியைக் கண்டறிந்து அதை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.