சுயசார்பு திட்டத்தின் எந்தெந்த கட்ட அறிவிப்புகள் எத்தனை கோடி.?- நிர்மலா சீதாராமன்

Default Image

சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டத்தின் இறுதிக்கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடந்து 5 நாளாக இன்று சுயசார்பு திட்டத்தின் இறுதிக்கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

சுயசார்பு திட்டத்தின் முதல்கட்ட அறிவிப்பு :

ரூ.20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் முதல் கட்ட அறிவிப்பில், சிறு, குறு தொழில் துறைகளுக்கு ரூ.5,94,550 கோடி மதிப்பிலான 6 சலுகையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

சுயசார்பு திட்டத்தின் 2ம் கட்ட அறிவிப்பு :

இரண்டாம் கட்ட அறிவிப்பில், ரூ.3,10,000 கோடி மதிப்பிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறு வியாபாரிகள், சிறு விவசாயிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 

சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்பு :

மூன்றாம் கட்ட அறிவிப்பில், ரூ.1,50,000 கோடி மதிப்பிலான  விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட 11 துறைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 11 அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்க்காக வெளியிடப்படுகின்றது. எஞ்சிய 3 திட்டங்கள் விவசாயத்துறைக்கான அரசாங்க முறைகளின் மாற்றங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சுயசார்பு திட்டத்தின் 4 ம் கட்ட அறிவிப்பு :

4 ஆம் கட்ட அறிவிப்பில், கனிமங்கள், ராணுவ பாதுகாப்பு தடவாள உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட 8 துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சுயசார்பு திட்டத்தின் இறுதிக்கட்ட கட்ட அறிவிப்பு :

5 ஆம் கட்ட (இறுதிக்கட்ட) அறிவிப்பில், நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம், சட்டங்கள் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 100 நாள் வேலைத்திட்டம், மருத்துவம் மற்றும் கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட 7 அறிவிப்புகள் இன்று அறிவிக்கப்பட்டது. சுயசார்பு திட்டத்தின் 4 மற்றும் 5 வது கட்ட அறிவிப்புகள் மதிப்பு ரூ.48,100 கோடி ஆகும்.

சுயசார்பு திட்டத்தின் மொத்தம் மதிப்பு :

சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை தொடர்ந்து 5 நாட்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பிரதமர் அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டத்தின் 5 கட்ட அறிவுப்புகளின் மொத்த மதிப்பு 11,02,650 கோடி ஆகும். ரிசர்வ் வங்கி அளித்த சலுகைகளின் மதிப்பு 8,01,603 கோடி. பொருளாதார திட்டத்தின் மொத்தம் மதிப்பு ரூ.20,97,053 கோடி ஆகும். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்