கொரோனா பரவலுக்கு மத்தியில் தாய் பால் தானம் செய்வது எவ்வளவு முக்கியம்?

Published by
Rebekal

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்வது குறித்து மிக முக்கியமானது மற்றும் அவசியமானது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கும், புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் அதிகம் பரவி வருகிறது. இந்நிலையில் பல தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பல தாய்மார்கள் உயிர் இழந்து விடுகின்றனர். அதனால் குழந்தைகள் தாய்ப்பாலுக்கு ஏங்கி வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அந்த தாயின் குழந்தைக்கு பிறர் பால் தானம் செய்வது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை உள்ள நேரங்களில் தாய்ப்பால் குடிப்பது மிக அவசியம் என கூறியுள்ள தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, தாயை இழந்த குழந்தைகளுக்கு அல்லது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு தங்கள் ஹெல்ப்லைன் நம்பர் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக பிறரிடம் கேட்டு அந்த குழந்தைகளுக்கு பால் தானம் செய்வதற்கு தாங்கள் உதவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர், பிளாஸ்மா மற்றும் மருந்துகள் ஆகியவற்றிற்கான ஆகியவை கிடைக்கும் இடங்கள் குறித்தும் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாமல் இருக்கிறது என்பதற்காக தாய்ப்பால் கொடுக்கக் கூடிய நன்கொடையாளர்கள் குறித்த வேண்டுகோளும் தற்போது தங்கள் மூலம் முன்வைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. மேலும், இது குறித்த தவறான கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தாய்மார்களிடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு நல்லது கிடையாது எனவும், கொரோனாவால் தாய் உயிரிழந்த நிலையில் அந்த குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கொரோனா பரவும் எனவும் சில வதந்திகள் பரவுவதாகவும், அது உண்மையல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் லக்னோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு குழந்தைக்கு தாய்ப்பால் தானம் செய்யுமாறு தங்களிடம் கேட்டதாகவும், கொரோணா பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைக்கு தாங்கள் தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் வாங்கிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

அது போல இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் போல மற்ற பிள்ளைகளையும் நினைத்து தாய்ப்பால் தானம் செய்ய முன்வர வேண்டும் எனவும், உங்களின் இந்த சிறு உதவி குழந்தைகளின் உயிரை பாதுகாக்கும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

சென்னை :  கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…

19 minutes ago

“அடிச்சி நொறுக்குவேன்..,” சொன்ன சம்பவத்தை செய்து காட்டிய இளம் வீரர் வைபவ்!

ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…

33 minutes ago

சித்திரைத் திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கொடியேற்றம்.!

மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…

1 hour ago

இனி ‘காலனி’ என்ற சொல் கிடையாது! முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…

1 hour ago

நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

3 hours ago