முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!
மருத்துவ ரீதியாக அனைத்து முயற்சிகளும் மேற்கொண்ட போதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை என்று எய்ம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், மன்மோகன் சிங் உயிரிழந்தது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வயது முப்பு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மன்மோகன் சிங், அவரது வீட்டில் நேற்றைய தினம் (26ம் தேதி) திடீரென சுயநினைவை இழந்தார்.
உடனடியாக வீட்டில் இருந்து நேற்று இரவு 8:06 மணிக்கு புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் மருத்துவ அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார்.
எவ்வளவோ முயற்சிகள் செய்தும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை, இரவு 9:51 மணிக்கு உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆழ்ந்த துக்கத்துடன், இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் காலமானார்
டாக்டர்.மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் இரவு 9.51 மணிக்கு பிரிந்தது – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை#Manmohan #ManmohanSingh pic.twitter.com/5fBkf1K7pP
— Priya Gurunathan (@JournoPG) December 26, 2024