குழந்தைகள் தினம் எப்படி உருவானது..? இந்நாளின் முக்கிய அம்சங்கள்….

Childrens day

குழந்தைகளை கொண்டாடும் வகையில் நாம் கொண்டாடக்கூடிய ஒரு தினம் தான் குழந்தைகள் தினம். இந்தியா முழுவதும் நவ.14-ஆம் தேதி குழந்தைகள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் தினம் உருவான வரலாறு 

ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், நவம்பர் 20ம் தேதி முதலில் குழந்தைகள் தினம் கொண்டாடடப்பட்டது. அதன்பின் ஜவஹர்லால் நேருவின் மறைவையடுத்து, 1964ம் ஆண்டு  இந்திய பாராளுமன்றம், நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு,  குழந்தைகளால் ‘மாமா’ என செல்லமாக அழைக்கப்படுகிறார். குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகள் குறித்து நேரு அவர்கள் பேசியுள்ளார்.  குழந்தைகளை இந்தியாவின் எதிர்காலம் என பேசிய அவர், குழந்தைகளுக்காக 1955ம் ஆண்டு இந்திய குழந்தைகள் ஃபிலிம் சொசைட்டியை நிறுவினார்.

குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம் 

குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம், அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். பிள்ளைகளில் குழந்தைகளுக்காக அவர்கள், கண்ணை கவரும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகள், அவர்கள் அனைவர் மீது கவனம் செலுத்தவேண்டும் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவின் சிற்பி என நேரு கூறிய வண்ணம், குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, அவர்களுக்கு மறைந்திருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வரவும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றனர்.

உலகளாவிய குழந்தைகள் தினம் என்பது குழந்தைகளை அவர்கள் யார் என்பதற்காக கொண்டாடுவதற்கான ஒரு நாள் மட்டுமல்ல, துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் பாகுபாடு போன்ற வடிவங்களில் வன்முறையை அனுபவித்த உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்