ரபேல் விவகாரத்தில் பாஜக அரசு செய்த தவறுக்கு காங்கிரஸ் எப்படி பொறுப்பாகும் ..! முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
ரபேல் விவகாரத்தில் பாஜக அரசு செய்த தவறுக்கு காங்கிரஸ் எப்படி பொறுப்பாகும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ராணுவ விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக விதிகள் எதுவும் இல்லை.பழைய வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மறுக்கிறது .இலங்கை போர் நடந்தபோது அதிமுக தலைவர்கள் எங்கிருந்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்அதேபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.