எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது – பிரதமர் மோடி.!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மறுநாள் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி மாநிலங்களவையில் பதில் அளித்து வருகிறார்.
அதில், “ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில் இந்தியாவின் ஆற்றல், வலிமை மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றி பேசினார். மேலும், தனது வெற்றி மந்திரம் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், குஜராத் முதல்வராக இருந்தபோதும், இன்றும் இந்தியப் பிரதமராக இருந்தபோதும் தனது மந்திரம் ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி:
நாட்டின் தேசிய மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை பராமரிப்பதில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என காங்கிரஸ் கட்சி கூறியதற்கு பிரதமர் மோடி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், ”நாட்டின் நிலத்தின் பெரும் பகுதியை எதிரிகளிடம் ஒப்படைத்த காங்கிரஸ், நாட்டின் ராணுவத்தை நவீனமயமாக்குவதை தடுத்து நிறுத்திய காங்கிரஸ், இன்று தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பேசுகிறது
வடக்கு-தெற்கு என பிரிக்கும் காங்கிரஸ்:
காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷின் ‘தென்னிந்தியாவிற்கு தனி நாடு’ என்ற கருத்துக்க பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி,”வடக்கு-தெற்கு” பிரிவினையை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, பழைய கட்சியை கடுமையாக சாடினார்.
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை கொன்றது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கலைத்த அந்த கட்சி நாட்டை பிளவுபடுத்தும் கருத்துக்களை முன் வைத்து வருகிறது. நாட்டை உடைக்க முயற்சிப்பவர்களுடன் காங்கிரஸ் இணைந்துள்ளது, இப்போது தெற்கை உடைப்பது பற்றி பேசுகிறது என்று கூறினார்.
எஸ்சி/எஸ்டி/ஓபிசி இடஒதுக்கீடு குறித்து பிரதமர்:
SC / ST மற்றும் OBC க்கு அதிக பங்களிப்பை வழங்குவதில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எப்போதும் சிரமம் உள்ளது என்று கூறினார்.
காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது- பிரதமர் மோடி..!
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது:
DR.அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிரஸ் கருதவில்லை என்றும், கட்சி “குடும்ப உறுப்பினர்களுக்கு” பாரத ரத்னா விருதை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். மத்தியில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைந்தபோதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி பேசினார்.
காங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியின் தவறான நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: பாஜக அரசு
காங்கிரஸ் 40 இடம் பெறணும் – மோடி
ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது. காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் பெறாது என மேற்கு வங்கத்திலிருந்து உங்களுக்கு ஒரு சவால் விடப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் 40 இடங்களை பெற வேண்டும் என நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.